நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் மக்களது பிரயானத்திற்கு நீண்ட காலமாக துணைநிற்கும் குமுதினிப்படகு கடந்த புரவி சூநாவளியில் தரித்து நின்ற இடத்தில் தண்ணீர் உட்புகுந்தால் கடந்த சில நாட்களாக சேவையில் ஈடுபடாதிருந்தது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் நிர்வகிக்கப்படும் இக் குமுதினிப்படகானது திருத்தம் செய்யப்பட்டு இன்று (டிசம்பர்) மதியம் 3.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு மீண்டும் 04.30 மணிக்கு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்த நெடுந்தீவு நோக்கி புறப்படும்.
வுடதாரகை நெடுந்தாரகை வலம்புரி போன்ற பல படகுகள் நெடுந்தீவிற்கு வந்து சென்றாலும் 40 வருடங்களுக்கு மேல் தனது சேவையை வழங்கி வரும் குமுதினி போன்ற படகே எமது மக்கள் போக்குவரத்துக்கு உகந்தது.
ஆயினும் தற்போது திருத்தம் செய்யப்பட்டதுன் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் ஏற்னவே தீர்மானிக்கப்பட்டது போன்ற மூன்று தடவைகள் சேவையில் ஈடுபடும் எனத்தெரிவிக்கப்படுகின்றது.
குமுதினியினது சேவைக்காலத்திற்கு மூன்று தடவைகள் என்பது குமுதினியாளுக்கு அதிகரித்த சுமையெனவே மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் நெடுந்தீவு மக்களுக்கு கைகொடுப்பவள் குமுதினியே அதனை சரியாக பாதுகாத்து பராமரிக்கப்படல் வேண்டும.