குடும்பத்தர் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்கானர்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு பிரதேசத்தில் பனையோலை வெட்டுவதற்காக பனை மரம் ஏறிய குடும்பத்தர் ஒருவர் பெரும் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ளார்.

நேற்றைய தினம் (ஜீன் – 15) இச் சம்பவம் இடம் பெற்றது. பனையோலை வெட்டுவதற்காக பனை மரம் ஏறி ஒலை தறித்த போது இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் 15ற்கு மேற்பட்ட குளவிக் கொட்டுக்கு இலக்காகிய பூவிலிங்கம் ரமணன் (வயது 37) என்பவர் உடனடியாக நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்றைய தினம் காலையில் உடல் நிலை ஒரளவு சரியான நிலையில் வீடு திரும்பியுள்ளார்

Share this Article