கிளிநொச்சி நீதிமன்றத்தில் சான்றுபடுத்தப்பட்ட கஞ்சாவை திருடிய நால்வர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கிளிநொச்சி நீதிமன்றத்தில் கடந்த மாதம் சான்றுபடுத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கஞ்சா திருடப்பட்டிருந்ததனையடுத்து கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உப்புல செனவரத்தினவின் கீழ் இயங்கி வருகின்ற மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் இரகசிய தேடுதலை மேற்கொண்டிருந்தனர்.

அந்த வேளையில், இது தொடர்பாக நேற்றுமுன்தினம் நால்வர் கைது செய்யப்பட்டதில் ஒருவர் நீதிமன்ற பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் நேற்றுமுன்தினம்  நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மீளவும் பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Share this Article