கிளிநொச்சியில் நெடுந்தீவின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவின் நிலையான அபிவிருத்திக்காக அடுத்த மாதம் 04  முதல் 10 வரை “மீண்டும் ஊருக்குப் போகலாம்”
எனும் தொனிப் பொருளில் நெடுந்தீவில் நடத்தப்படவுள்ள “நெடுவூர்த் திருவிழாவில்” துறைசார்ந்த திட்ட நிகழ்வுகளை சிறப்புற நடத்துவதற்கு ஏதுவாக அவை தொடர்பில் கிளிநொச்சி நகரில் ஆலோசனைக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

நேரம்:- பி.ப.2.00 மணி
காலம்:- 21.07.2024
இடம்:- மாவட்ட கூட்டுறவு சபை மண்டபம், டிப்போ சந்தி அருகாமை, கிளிநொச்சி.

Share this Article