கிளிநொச்சியில் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான வாய்மொழிப் பரீட்சை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு எழுதுதல் வாசித்தல் திறன் குறைத்தவர்களுக்கான வாய்மொழிப்பரீட்சையினை எதிர்வரும் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடாத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்படி காரணங்களின் நிமித்தம் இதுவரை சாரதி அனுமதிப்பத்திரம் பெறத்தவறியவர்கள் இவ் அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாது பயன்படுத்திக்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் பிரதம மோட்டார் வாகன பரிசோதகர் G.H.D.K விஜயசேகரா அறிவித்துள்ளார்.

இப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன் A9 வீதி, கிளிநொச்சி பழைய கச்சேரி வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் மாவட்ட காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்வதுடன், மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவினர் அறிவித்துள்ளனர்.

Share this Article