கிளிநொச்சியில் கசிப்புக் காய்ச்சிய மூவர் கைது!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்தலியாற்றில் 17 லீற்றர் கசிப்புடன் ஒருவரும், புளியம்பொக்கனைப் பகுதியில் 21 லீற்றர் கசிப்பு மற்றும் கோடாவுடன் இருவரும் நேற்று (பெப்ரவரி 6) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து கசிப்புக் காய்ச்சப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article