கிரிக்கெட் தொடரில் புங்குடுதீவு வொரியர்ஸ் கழகத்துக்கு வெற்றிக் கிண்ணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டுக்கழகமும் சனசமூக நிலையமும் இணைந்து நடத்திய கிரிக்கெட் தொடரில் புங்குடுதீவு வொரியர்ஸ் கழகத்தினர் வெற்றிக் கிண்ணத்தையும், பணப் பரிசிலையும் தட்டிச் சென்றுள்ளனர்.

இந்தத் தொடரின் போட்டிகள் புங்குடுதீவு ஈஸ்ரன் கழக மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன. புங்குடுதீவை சேர்ந்த நசரெத் , ஈஸ்ரன் , அம்பாள், நண்பர்கள், வொரியர்ஸ், சென்சேவியர் ஆகிய கழகங்கள் இந்தத் தொடரில் பங்குபற்றின.

அதேவேளை, இந்த நிகழ்ச்சியில் தொடராக இடம்பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டித்தொடரில் முதலாமிடத்தை பாரதி விளையாட்டுக் கழகமும், இரண்டாவது இடத்தை அம்பாள் விளையாட்டு கழகமும் பெற்றுக்கொண்டன.

இந்தச் சுற்றுப் போட்டிகளில் நல் ஒழுக்கத்தை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

புங்குடுதீவு சென்சேவியர் சனசமூக நிலையத்தின் முக்கியஸ்தர் விவேக் ராகுலனின் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் விருந்தினர்களாக வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் , TK transport உரிமையாளர் திலீப், புங்குடுதீவு – பிரான்ஸ் சவேரியார் ஒன்றிய தலைவர் செபமாலை மதன், புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article