கிண்ணம் வென்றது அம்பாள் சனசமூக நிலைய அணி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

உள்ளூராட்சி வாரம் – 2023 இனை முன்னிட்டு காரைநகர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சனசமூக நிலைய அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டியில் அம்பாள் சனசமூக நிலைய அணி வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கியது.

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு காரைநகர் பிரதேச சபை நடாத்திய சபை எல்லைக்கு உட்பட்ட 12 சனசமூக நிலைய அணிளுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் போட்டி இன்று(ஒக்ரோபர் 22) களபூமி விளையாட்டு மைதானத்தில் காலை 8:30 மணி முதல் மாலை வரை இடம்பெற்றது.

அம்பாள் சனசமூக நிலையம் எதிர் கலைவாணி சனசமூக நிலையம் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இடம்பெற்ற போட்டியில் அம்பாள் சனசமூக நிலைய அணி வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கியது.

Share this Article