காரைநகர் LDSP அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

காரைநகர் பிரதேச சபையினால் 2023/2024 ஆம் ஆண்டுகளில் உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நிதியின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள LDSP அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விளக்கமளிக்கும் முதற் கட்ட கலந்துரையாடல் இன்று (செப்ரெம்பர் 25) பிரதேசசபை தலைமை அலுவலக மாநாட்டு மண்டபத்தில் மதியம் 2:00 மணியளவில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் , மற்றும் சபையின் முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டம்தொடர்பான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இக் கருத்துப் பரிமாற்ற செயற்பாடு மக்களாட்சி கோட்பாட்டினை வலியுறுத்துவதுடன் அபிவிருத்தியில் நீடித்து நிலைத்திருக்கும் (SDG) கோட்பாட்டினையும் வலியுறுத்துவதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article