காரைநகர் பிரதேச சபை முன்னெடுக்கவுள்ள நடமாடும் சேவை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச சபை எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடமாடும் சேவையை மருதடி கிராம அலுவலர் அலுவலகத்தில் முன்னெடுக்கவுள்ளது.

காலை 9.00 மணி தொடக்கம் மாலை 1.00 மணி வரை இந்த சேவைகள் வழங்கப்படவுள்ளன.

காரைநகர் வடகிழக்கு(ஜெ 47) கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த மக்கள் இந்த சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆதனவரி அறவீடு, கட்டட அனுமதி பெறுவதற்கான விண்ணப்ப படிவம் வழங்கல், அபிவிருத்தி சம்பந்தமான கோரிக்கை முன்வைத்தல், ஆதனப்பெயர் மாற்றம் தொடர்பான நடவடிக்கை, வியாபார நிலையங்களுக்கான உரிமம் வழங்கல், துவிச்சக்கர வண்டி உரிமம் வழங்கல் ஆகிய சேவைகள் வழங்கப்படவுள்ளன.

 

Share this Article