காரைநகரில் மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தி திட்டம் தயாரிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச சபையினால், மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

மேற்படி பிரதேச சபைப் பிரிவில் வட்டார ரீதியாக பொது மக்களுடனான கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு, வட்டாரத்திற்குரிய தேவைகள் மற்றும் அபிவிருத்தி வேலைகள் இனங்காணப்பட்டு முன்னுரிமைப்படுத்தப்படவிருப்பதுடன் அவை பிரதேச ரீதியாகத் தொகுக்கப்படவுள்ளன.

மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தித் திட்டத்தை தயாரிக்கும் பொருட்டு, நாளை(செப்ரெம்பர் 5) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு 02 ஆம் வட்டாரத்திற்குரிய கூட்டம், காரை மத்தி ஜே-48 கிராம அலுவலர் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி கூட்டங்களில் பங்கேற்று, பொதுமக்கள் தமது பகுதிக்குத் தேவையான அபிவிருத்தி முன்மொழிவுகளை வழங்குமாறு காரைநகர் பிரதேச சபையின் செயலாளர் கேட்டுள்ளார்.

Share this Article