காரைநகரில் இடம்பெற்ற முன்பள்ளிச் சிறார்களின் கல்விக் கண்காட்சி நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் நீலங்காடு கிராமத்தில் பிரதேச சபையினால் நடாத்தப்படும் பிரதேச சபை முன்பள்ளிச் சிறார்களின் கல்விக் கண்காட்சி நிகழ்வு நேற்று(ஓகஸ்ட் 16) முன்பள்ளியில் இடம்பெற்றது.

இக் கல்விக் கண்காட்சியினை சபைச் செயலாளர், சபையின் தெற்கு உப அலுவலகப் பொறுப்பதிகாரி, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முன்பள்ளி துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறார்களின் ஆக்கத்திறன் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் சிறார்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களினால் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி நிகழ்விற்கு பாராட்டினையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Share this Article