காணமல் போனவர் இதுவரை கண்டறியப்படவில்லை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மேற்கு பனங்கானி முனையில் இருந்து கடந்த முதலாம் திகதி (ஜீலை 01) தொழிலுக்கு சென்ற நெடுந்தீவு 08ம் வட்டாரத்தினை சேர்ந்த சில்வெஸ்ரர் மரியதாஸ் (வயது 65) இது வரை கண்டறியப்படவில்லை.

சிறிய கட்டுமரம் மூலம் தொழிலுக்கு சென்றவர் மீண்டும் வீடு வந்து சேராமையால் நான்கு நாட்களாக அவரைத் தேடும் பணி தொடர்கின்றது.

நெடுந்தீவினை சூழவுள்ள தீவுகள், மற்றும் குறிப்பாக கச்சதீவு கக்கடதீவு போன்ற தீவுகள் அனைத் இடங்களிலும் படகுகள் மூலம் சென்று தேடுதல் நடிவடிக்கையினை நெடுந்தீவு கடற்தொழிலாளர் சங்கங்கள் மேற்கொண்டன அதே நேரம் கடற்படையினர், மற்றும் ஏனைய இடங்களுக்கும் இவ் விடயம் தொடர்பான செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டு பல்வேறு முனைகளில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஆயினும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை

Share this Article