கவிஞர் ஈழபாரதியின் “ஐந்திணை நிலமும் ஆறாம் திணை அகதியும்” என்ற நூலின் வெளியீட்டு விழா நெடுந்தீவில் நடைபெற இருக்கிறது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கவிஞர் ஈழபாரதியின் “ஐந்திணை நிலமும் ஆறாம் திணை அகதியும்” என்ற நூலின் வெளியீட்டு விழா நெடுந்தீவில் நடைபெற இருக்கிறது.

கவிஞர் ஈழபாரதி எழுதிய “ஐந்திணை நிலமும் ஆறாம் திணை அகதியும்” என்ற நூலின் அறிமுக விழா நாளை புதன்கிழமை (மே 21) காலை 10:00 மணிக்கு, நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வில், கலாச்சார உத்தியோகத்தர் திரு அ. சிவஞானசீலன் அவர்கள் தலைமையிலில், நூலை பிரதேச செயலாளர் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்கள் வெளியிட, றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி முதல்வர் அருட் சகோதரி மெரினா சகாயம் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.

நூல் வெளியீட்டு உரையை நெடுந்தீவு மகாவித்தியாலய அதிபர் ஐ. தாயாபரன் அவர்கள் வழங்க, நெடுந்தீவின் பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதன் அடிகளார் மற்றும் கவிஞர் நெடுந்தீவு செ.மகேஷ் அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற உள்ளது.

கலை இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

Share this Article