கராத்தே போட்டியில் நெடுந்தீவு மண்ணின் மைந்தன் அருள்விதுசன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் மேற்பார்வையில் பருத்தித்துறைஉள்ளக அரங்கில் கடந்த சனிக்கிழமை (மே 31) நடைபெற்ற யாழ் மாவட்டகராத்தே போட்டியில் நெடுந்தீவு மண்ணின் மைந்தன் அருள்விதுசன்  சிறப்பாகச்விளையாடி வெள்ளிப் பதக்கத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

JKS கழகத்தின் மாணவரான இவர் , கராத்தே என்பது அவரது வாழ்வின் ஓர்அங்கமாகவே அமைந்ததுடன் சகல போட்டிகளிலும் ஆர்வத்துடன் கலந்துகொள்வதை வழக்கமாக்கியவர் என்பதுடன் எந்தவொரு பயிற்சியையும்தவறாமல், சுயமாக பயிற்சி செய்து தன்னை தானே மேம்படுத்திக் கொள்ளும்ஆற்றல் மிக்கவர் என இவரது வெற்றிக்கான வாழ்த்துச் செய்தியில் JKS கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர் வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையில் நெடுந்தீவு மண்ணின் வளர்ந்துவரும் உழைப்பும் முயற்சியும் கொண்ட இளைஞராக  திகழ்வதுடன் உழைப்பும், ஆற்றலும், மிக்கவராக இளைஞர்களுக்கே ஓர் முன் மாதிரியாகதிகழும் வகையில் முன்னேறி வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

Share this Article