கனேடிய அனலைதீவு ஐயனார் ஆலய சிவராத்திரி விழா

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கனேடிய அனலைதீவு ஐயனார் ஆலயத்தின் மஹா சிவராத்திரி விழா எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

அன்றையதினம் ஸ்ரீ பார்வதி அம்பிகை உடனுறை ஸ்ரீ நாகேஸ்வர பெருமானுக்கு ஏகாதச ருத்ர பாராயண ஹோமம் நடத்தப்படவுள்ளது.

ஹோமத்தில் அடியார்கள் அனைவரும் பங்குபற்றி, உங்கள் கைகளால் பூர்ணாகுதியிட்டுக் கொள்வதுடன், சிவலிங்கப் பெருமானுக்கு வில்வ அர்ச்சனையும், பால்குட அபிசேகமும் செய்து சிவபெருமானின் திருவருள் பெறமுடியும்.

சிவராத்திரி தினத்தன்று 4.30 மணிக்கு மாலைப் பூசையைத் தொடர்ந்து, விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம், கும்ப பூசை, ஸ்ரீ ருத்ர பாராஜண ஹோமம், கலச அபிசேகம் என்பன நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article