இன்றைய தினம் 24.10.2020 கனடா மக்கள் ஒன்றியத்தின் கடிதத்தலைப்பின் ஊடாகவும் முகநூல்கள் மற்றும் இணையத்தளம் ஊடாக பிரசுரிக்கப்பட்ட பொதுக்கூட்டத்திற்கும் நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை என நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் தலைவர் திரு.முருகேசு சாந்தகுமார் அவர்கள் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட திரு.த.கிருபாகரன் அவர்கள் 15.08.2020 அன்று செயலாளர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் ஆயினும் அவர் ஒன்றியத்தின் ஆவணங்களை சமர்ப்பிக்காது தன்னிச்சையாக சர்வாதிகரமாக சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார் எனவும் அதன் ஒரு வழியாக அமைப்பின் கடிதத்தலைப்பின் ஊடாகவும் அமைப்பு முகநூல் ஊடாகவும் அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
அத்துடன் தற்போதைய நிர்வாகத்தில் பொறுப்பான பதவிகளில் உள்ள எவரது கையொப்பங்களும் இல்லாமலே இவ்வறித்தல் பிரசுரிக்கப்பட்டதாகவும் நடைபெறும் பொதுக்கூட்ம் மற்றும் தெரிவுக்கூட்டத்திற்கும் கனடா மக்கள் ஒன்றியம் நெடுந்தீவு அமைப்பிற்கும் எது வித தொடர்புகளும் இல்லை எனவும் தலைவர் செயலாளர் பொருளாளர் கையொப்பம் இட்டு எமது இணையத்தளத்திற்கு அனுப்பி வைத்துள்ளர்