கனடாவுக்கு கல்வி விசா பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த ஐந்து பெண்கள் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கனடாவுக்கு விசா பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒரு ஆணும், ஐந்து பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்துக்குக் கிடைத்த பல்வேறு முறைப்பாடுகளை அடுத்து மேற்கொள்ள விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடவத்தைப் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இயங்கி வந்த போலி ஆவண நிலையம் ஒன்று சோதனையிடப்பட்டபோது, பொலிஸாரால் பல பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article