கண்டாவளையில் வீட்டு திட்ட கொடுப்பனவுகளை வழங்கக் கோரி மக்கள் போராட்டம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட 50 லட்சம் ரூபா பெறுமதியான புதிய வீட்டுத் திட்டத்தின் கொடுப்பனவுகள் தற்காலிமாக

இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (16.11) காலை பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 1,800-க்கும் மேற்பட்டோர் குறித்த வீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் வீட்டு திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பான மீள் பரிசீலனையை முன்னிட்டு கொடுப்பனவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் பாதிக்கப்பட்ட சில பயனாளிகள் தமக்கான வீட்டுத் திட்ட கொடுப்பனவுகளை உடனடியாக வழங்குமாறு கோரி இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பாக ஏற்கனவே வீடமைப்பு பணிகளை ஆரம்பித்துள்ள பயனாளிகள், அடுத்தகட்ட நிதிக் கொடுப்பனவுகள் கிடைக்காமையால் நிர்மாணப் பணிகளைத் தொடர முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீடு எமது உரிமை – கொடுப்பனவு அரசின் பொறுப்பு “நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டக  கொடுப்பனவுகளை உடனடியாக வழங்கு” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

வீட்டு திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் அவை முறையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அதற்காக உண்மையாகப் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுக் கனவுகளை முடக்கிவிடக் கூடாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், தகுதியான பயனாளிகளை விரைவாக அடையாளம் கண்டு, அவர்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்கி வீடமைப்புப் பணிகளைத் தொடர அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Article
Leave a comment