கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடைத் திட்டம்- நெடுந்தீவில் இருந்து ஆரம்பம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த கருத்தடைத் திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாகவும், இதற்கான பணி நெடுந்தீவில் இருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் வட மாகாண உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்குமாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இந்தச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில், அதுதொடர்பாக உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதன் ஓர் அங்கமாக நாய்களுக்கு கருத்தடை செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரும் எனபேசப்பட்டது.

இதன் ஆரம்ப செயற்றிட்டம் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் நகர்ப்புறங்களில் இதற்கான செயற்றிட்டத்தை முன்னெடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share this Article