கடையொன்றினுள் மறைத்து வைத்து விற்பனை செய்த கஞ்சா பொதிகள் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
பதவியா பகுதியிலுள்ள கடையொன்றினுள் மறைத்து வைத்து விற்கப்பட்ட கஞ்சா பொதி இராணுவத்தின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.
பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்னுள் மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக யாழ்ப்பாணத்திலுள்ள 51 ஆவது இராணுவ தலைமையக புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த கஞ்சா பொதி கடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
கடையினுளிருந்து 4.5 கிலோ கிராமுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளதுடன் விற்பனை செய்த இருவர் பதவியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதவியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this Article