கசிப்பை ஒழிக்கக் கோரி முக்கொம்பனில் ஆர்ப்பாட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கசிப்புக் காய்ச்சுபவர்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கிளிநொச்சி, முக்கொம்பன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

முக்கெம்பன் பொதுச் சந்தையில் இருந்து ஊர்வலமாக முக்கெம்பன் மகா வித்தியாலயம்வரை சென்ற கிராம மக்கள், தங்கள் பகுதியில் சட்டவிரோத மதுப் பாவனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கடந்த 31ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கிராமத்தைச் சேர்ந்த 60க்கும் அதிகமானவர்கள் பங்குகொண்டனர்.

Share this Article