ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கைவேலி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவரை நேற்று(டிசம்பர் 29) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கைவேலி பகுதியிலுள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலைக்கு அருகாமையில் விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸார் 8 பைக்கற்றுக்களில் 15 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞனை கைது செய்துள்ளதாகவும் குறித்த ஐஸ் போதைப்பொருள் 80,000 ரூபா பெறுமதியுடையது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை உடமையில் வைத்து விற்பனை செய்ய தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share this Article