எழுவைதீவு பிரதான வீதியில் அறுந்து விழுந்திருக்கும் மின்வயர்கள்!- அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

எழுவைதீவு பிரதான வீதியில் மின்வயர் கழன்று விழுந்து கம்பி வெளிவந்து ஆபத்தான நிலையில் மின்விநியோகம் இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 30 ஆம் திகதி பனைமரம் விழுந்து 3 மின்கம்பங்களில் இருந்த இணைப்பு வயர் கழன்று வீதியின் நடுப்பகுதியில் ஒரு வராத்திற்கு மேலாக ஆபத்தான நிலையில் இருப்பதுடன் இன்றுவரை இவ் இணைப்பு சரிப்படுத்தாது மின்சாரம் வழங்கப்படுகின்றது.

இது பாரிய உயிர் ஆபத்திற்கு வழி வகுப்பதாக அமையும் என்று மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கடந்த வாரம் ஊர்காவற்துறை பிரதேசசபை செயலாளர் நேரடியாக இதனைப் பார்வையிட்டு முறைப்பாடு முன்வைத்தார்.

பொதுமக்கள் சார்பிலும் முறைபாடு முன்வைக்கப்பட்டும் இதுவரை ஆக்கபூர்வமான பணிகள் எதுவும் இடம்பெறவில்லை.

Share this Article