எழுவைதீவில் இடம்பெற்ற ஆங்கில வகுப்பு இடமாற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

எழுவைதீவு பொது நூலகத்தில் இதுவரை காலமும் இடம்பெற்று வந்த இலவச ஆங்கில வகுப்பு இன்று முதல் தனியார் ஒருவரின் வீட்டில் இடம்பெறுகின்றது.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் கீழுள்ள எழுவைதீவு பொது நூலகத்தில் தரம் 01 தொடக்கம் 05 வரையான மாணவர்களுக்கு இலவசமான முறையில் ஆங்கில வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், ஊர்காவற்றுறை பிரதேச சபையினரின் அறிவித்தலுக்கு அமைய இவ்வகுப்பு அண்மையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதன் காரணமாக மாணவர்களது கல்வி முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தற்போது தனியார் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“தேடல் உள்ள சமூகம் அறிவை வளப்படுதும்” எனும் தொனிப்பொருளில் ஓய்வுநிலை கிராம சேவையாளர் சுந்தரலிங்கம் அவர்களால் இலவசமாக கற்பிக்கப்படுகின்றது.

Share this Article