எரிபொருள் விலைகளின் மாற்றம் – எரிசக்தி அமைச்சின் பிந்திய தகவல்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

எதிர்வரும் நாள்களில் இலங்கையில் எரிபொருள் விலையைத் திருத்துவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுத் தயாராகி வருகின்றது என்று எம்.பி.டி.யு.கே. மாபா பத்திரன தெரிவித்தார்.

எரிபொருள் விலை குறைக்கப்படும் என்றபோதும், எந்தளவுக்கு விலை குறைக்கப்படும் என்பது தொடர்பில் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. விலைகுறைப்பு பெரும்பாலும் நாளை அல்லது மறுநாள் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலைச் சூத்திரத்தின்படி நாங்கள் விலைகளைத் தீர்மானிப்போம் என்று தெரிவித்த அவர், விலைத் திருத்தம் தொடர்பாக முடிவெடுப்பதற்கு முன்னர் மாற்றுவிகிதம், வரிகள் மற்றும் பிற செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share this Article