ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஆரம்ப நிகழ்வு காணொளி மூலம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

“நேர்மையான தேசத்தை நோக்கி” ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத்  திட்டம் ஆரம்பிக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் யாழ் மாவட்டச் செயலகஉத்தியோகத்தர்கள் காணொளி ஊடாக இணைந்து கொண்டனர்.

ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத்  திட்டம் ஆரம்பிக்கும் நிகழ்வுநேற்றையதினம் (ஏப்ரல்09) காலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்தசர்வதேச மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வு சமநேரத்தில் காணொளி மூலம்   மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன் தலைமையில்  யாழ் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள்மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஒன்று கூடி இணைந்து கொண்டனர்.

ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்தல் தொடர்பாகசனாதிபதியால் ஆற்றப்பட்ட உரை காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது.

ஊழல் எதிர்ப்பு விழிப்பூட்டல் காணொளியும், ஊழலுக்கு எதிரான தேசியசெயற்பாட்டுத் திட்டத்தினை தயாரித்தல் மற்றும் அதன் முக்கிய பிரிவுகளைசுருக்கமாக விபரிக்கும் காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், ஊழலுக்குஎதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தினை (2025 – 2029) உத்தியோகபூர்வமாக சனாதிபதி அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வும்இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் நேரடியாக சகல மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும் பங்குபற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article