ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் தொடர்ந்து இடம் பெற்று வருகன்றத பாடசாலை சிரமதானப் பணிகள்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

“பள்ளிகளைச் சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம்”

எனும் தொனிப்பொருளில் ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினால் எமது தாய் மண்ணில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இன்னுமொரு செயற்திட்டமாக ஊரில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் அதன் சுற்றுப்புறங்களையும் சிரமதானம் மேற்கொள்ளும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் 11 ஒக்ரோபர் 2020 அன்று நெடுந்தீவு மேற்கு மங்கையற்கரசி வித்தியாலயத்திலும்
அதனைத் தொடர்ந்து 21 ஒக்ரோபர் புதன்கிழமை நெடுந்தீவு மேற்கு ஶ்ரீஸ்கந்தா வித்தியாலயத்திலும் சிரமதான பணிகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து் வரும் வெள்ளிக்கிழமை (06/11/2020) அன்று காலை 9.30 மணிக்கு நெடுந்தீவு மத்தி சீக்கிரியாம் பள்ளிக்கூடத்தில் சிரமதான பணிகள் நடைபெற உள்ளதால் ஊரின் இளைஞர் யுவதிகள் பெரியோர்கள் அனைவரையும் ஊர் சார்ந்த பணிகளில் உணர்வுடனும் விருப்புடனும் பங்காளிகளாக இணைந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.

ஊரும் உறவும் நெடுந்தீவு.

Share this Article