உள்ளூராட்சித் தேர்தல்: அஞ்சல் வாக்களிப்பு காலவரையறை இன்றி ஒத்திவைப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்புக்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் திணைக்களம் இந்த அறிவிப்பை இன்று (பெப்ரவரி 17) வெளியிட்டுள்ளது.

உரிய தினத்துக்குள் அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் கிடைக்காமையால் அஞ்சல் வாக்களிப்பு திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆ ணைக்குழு அறிவித்துள்ளது.

உரிய நிதி விடுவிக்கப்படாததால் முன்னதாக அஞ்சல் வாக்களிப்புச் சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கைகள் காலவரையறையின்றி தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது அஞ்சல் வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலைமையால் அறிவிக்கப்பட்ட திகதியில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுவது சந்தேகம் என்று கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

Share this Article