உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கிழக்கு 11ம் வட்டாரத்தினை சேர்ந்த அமரர் நாகலிங்கம் ஆறுமுகம் அவர்களின் 24வது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு கொவிட் 19 பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு; ஒரு குடும்பத்திற்கு ரூபாய 2000.00 பெறுதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.


திருகோணமலை மாவட்டத்தின் கோட்றோட் பகுதியில் வாழும் அன்றாடம் தொழில் செய்யும் தற்போது பாதிக்கப்பட்டு மிகவும் வறுமைகோட்டிற்குட்பட்ட மக்களுக்கு இவ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
நெடுந்தீவினை சேர்ந்த தற்போது கனடாவில் வசிக்கும் திரு.ஆறுமுகம் குகன் அவர்கள் தனது தந்தையின் நினைவு தினத்தினை முன்னிட்டு இவ் உதவியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


திரு. ஆறுமுகன் குகன் அவர்கள் கடந்த நாட்களிலும் தந்தையின் பல்வேறு உதவிகளை நெடுந்தீவிலும் வன்னி மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமரர் நாகலிங்கம் ஆறுமுகம் அவர்களது ஞாபகமாக நெடுந்தீவில் புலமைப்பரிசில் பரிசிட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது

Share this Article