உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சாதனை அளவில் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 இதற்கமைய, கச்சா எண்ணெய் விலையானது இந்த ஆண்டின் மே மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக 100 டொலரைக் கடந்து பதிவாகியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதில், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.55% உயர்ந்துள்ள நிலையில், அதன் விலை 101.0 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

 அதேபோல், BRENT கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.25% உயர்ந்துள்ள நிலையில், அதன் புதிய விலையாக தற்போது 114.6 அமெரிக்க டொலர் பதிவாகியுள்ளது.

 MURBAN ரக கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளதுடன், அதற்கமைய அதன் புதிய விலையாக 114.4 அமெரிக்க டொலர் பதிவாகியுள்ளதுடன், அது 3.81% உயர்வைக் காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இவ்வாறு கச்சா எண்ணெய் விலையேற்றம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Share this Article
Leave a comment