உணர்வுடன் இடம்பெற்ற நெடுந்தீவை உலுக்கிய மாவிலி படுகொலையின் 2ஆம் ஆண்டு நினைவுநாள் !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு இறங்கு துறைக்கு முன்பாக அமைந்திருந்த வீடொன்றில் தங்கியிருந்த அறுவர் இதேநாளில் (22.04.2023) அதிகாலை வேளை வெட்டியும், அடித்தும் படுகொலை செய்யப்பட்ட பெரும் துயரத்தின்  இரண்டாவது ஆண்டு நினைவு நாள் இன்று(ஏப்ரல்22) உணர்வுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

நினைவு நாள் நிகழ்வுகள் , கொலை சம்பவம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரால் ஏற்பாடு செய்யப்பட்டு , வீட்டின் முன்பாக தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு குளிர்பானம் மற்றும் சிற்றுண்டி இன்று காலை முதல் மாலை வரை வழங்கப்பட்டது.

இதேவேளை சம்பவத்தில் உயிர் நீத்த வேலாயுதம் நாகரத்தினம். (மாணிக்கம்), காரத்திகேசு நாகசுந்தரி (செல்லம்) ஆகியோரின் நினைவாக அவர்களது மகன் செல்வன் நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின்  பாவனைக்காக 50 கதிரைகளினை உறவினரூடாக இன்றையதினம் கையளித்திருந்தனர்.

அத்துடன் நெடுந்தீவு மங்கயற்கரசி வித்தியாலய சகல மாணவர்களுக்கான புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதியும் இவர்கள் நினைவாக வழங்கிவைக்கப்பட்டது.

Share this Article