இளைஞர், யுவதிகளிடையே வேகமாகப் பரவும் தொற்று – இலங்கை எதிர்நோக்கும் சிக்கல்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையில் கொரோனாத் தொற்றுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு டெங்குத் தொற்று அச்சம் தரும் வகையில் பரவிவருகின்றது.

இளைஞர், யுவதிகள் இடையே டெங்குத் தொற்றுத் தீவிரமாகப் பரவுகின்றது என்று இலங்கையின் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு டெங்குத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் தெளிவான அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போதுவரை அங்கு 47 ஆயிரம் டெங்குத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு டெங்குத் தொற்றுக்குள்ளானவர்களில் 75 சதவீதமானோர் 15 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.

Share this Article