இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கிளிநொச்சி சோலைநிலா பகுதியைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு தலா தலா 3 ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன.

புதிய கல்வியாண்டுக்கு செல்லும் வடக்கு கிழக்கு மாகணங்களைச் சேர்ந்த தேவையுடைய ஆயிரம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் விசேட செயற்திட்டத்தின்கீழ் இவை வழங்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட சோலைநிலாக் கிராமத்தைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு நியூசிலாந்து வன்னி நேயம் அமைப்பினர் வழங்கிய நிதி அனுசரனையூடாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நியூசிலாந்து வன்னிநேயம் அமைப்பினர் ஆண்டுதோறும் கிளிநொச்சி் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டத்துக்கு நிதி அனுசரணை வழங்குகின்றனர்.

Share this Article