இலங்கையில் மீண்டும் கொரோனாத் தொற்று!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ஜே.என் – 1 ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூடத் தலைவர் சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

கொரோனா சோதனைகள் தற்போது குறைந்தளவிலேயே முன்னெடுக்கப்படுவதால், அதன் உண்மையான தரவுகளைப் பெற முடியாதுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கொரோனா வைரஸூக்கு எதிரான நோய் எதிர்ப்புத் தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படுகின்றன என்றும், அதிக பாதிப்பை எதிர்கொள்ளும் தரப்பினர் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்குக் காய்ச்சலும் பரவும் நிலையில், தொடர்ச்சியான காய்ச்சல் காணப்படுமா னால், அது தொடர்பில், பொதுமக்கள் உரிய மருத்துவரை அணுகி ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Share this Article