இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் 35 ரூபாவிற்கு விநியோகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் லங்கா சதொச ஊடாக 35 ரூபாவிற்கு விநியோகிக்கப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் தமக்கு தேவையான அளவு முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் உள்ளூர் சந்தையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்து ஒன்றரை கோடி முட்டைகளுடனான கப்பலொன்று நேற்று இரவு நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இதுவரையில் ஆய்வுக்காக வழங்கப்படவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article