கடந்த நாட்களில் ஏற்பட்ட புரவி புயல் காரணமாக நெடுந்தீவிற்காக போக்கவரத்துக்கள் தடைசெய்யப்பட்டுக் காண்ப்பட்டன. கடல் கொந்தளிப்பு மற்றும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டமையால், போக்குவரத்துக்கள் மக்கள் பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டிருந்தன.
ஆந்த வகையில் இன்றைய தினம் (December 06) காலை 07.30 மணிக்கு கரிகணன் தனியார் படகு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டுள்ளது. இப்படகு மாலை 03.00 மணிக்கு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரச படகுகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது இந்த வகையில் இப்புரவியின் பின்னர் குறிப்பிட்ட படகே மக்கள் சேவையில் இணைந்து வருகின்றது கடந்த வெள்ளிக்கிழமையும் இப்படகின் ஊடாகவே மக்கள் தங்கள் போக்குவரத்தினை மேற்கொண்டார்கள்
வடதாரனை பழுதடைந்து நீண்ட நாட்களாக காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நிற்கின்றது. குமுதினி பழுதடைந்து நெடுந்தீவில் தரித்து நிற்கின்றது. நெடுந்தாரைகை அழகாக மாவிலித்துறைமுகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது மக்கள் திறந்த படகுகளில் பல அசௌகரியங்களுக்க மத்தியில் தங்கள் பிரயாண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்
அரச திணைக்கள அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் தயவாக இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறு நெடுந்தீவு மக்கள் கேட்டு நிற்கின்றனர்.