இடைநிறுத்தப்பட்டுள்ள கடற்பாதை படகுச் சேவையை கோரும் நயினாதீவு மக்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நயினாதீவு குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அதிகாரசபைக்கு சொந்தமான கடற்பாதை படகு கடந்த சில மாதங்களாக பழுதடைந்து சேவையில் ஈடுபடுத்த முடியாமல் இடைநிறுத்தப்பட்டுள்ளதனால் நயினாதீவு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

தற்போது குறிகட்டுவான் பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக அதனூடாக நயினாதீவிற்கு வர்த்தகர்களின் உணவுப் பொருட்கள், வாகனங்கள் மற்றும் கட்டிடப்பொருட்களை ஏற்றி இறக்குவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் சம்பந்தமான அதிகாரிகள் தங்கள் கவனத்தில் எடுத்து நயினாதீவு குறிகட்டுவான் இடையில் மீண்டும் பாதைப்படகு சேவையினை
நடாத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதைப்படகில் ஏற்பட்டுள்ள திருத்த வேலைகளை மேற்கொண்டு போக்குவரத்தை இலகுபடுத்த வேண்டுமென நயினாதீவு மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

 

Share this Article