“ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்குவோம் ” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் புரட்டாதி மாதம் எமது தாய்மண் நெடுந்தீவில் நடாத்தப்படவிருக்கும் செயலமர்வுடன் ஊரில் வாழும் எமது சொந்தங்களை இணைத்து மாபெரும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம்.
எனவே அந்த மாபெரும் நிகழ்வினை எமது மண்ணில் ஒருங்கிணைத்து திட்டமிட்டு வழிநடத்தும் வகையில் செயற்படுத்துவதற்கு ஏற்றதொரு ஒருங்கிணைப்புக் குழுவொன்றினை ஊரின் உறவுகளின் சுயவிருப்பின்பேரில் தற்காலிகமாக தேர்வு செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதற்கேற்ற வகையில் நெடுந்தீவின் உறவுகளாக இலங்கையின் ஒவ்வொரு பாகங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது சொந்தங்களை இணைத்து கலந்துரையாடல் ஒன்றினை zoom தொழில்ஙட்பத்தினூடாக எதிர்வரும் Aug 22, 2020 சனிக்கிழமை மாலை 4.00(இலங்கை நேரம்) மணிக்கு நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.
நெடுந்தீவின் உறவுகளாய் தாங்கள் அனைவரும் அதில் கலந்து தங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு ஊரும் உறவும் நெடுந்தீவு எனும் அமைப்பினர் அன்புடன்
கேட்டு நிற்கின்றனர்
Meeting ID:- 86257795422
Meeting Time:- 4.00 P.M
Meeting Date:- Saturday Aug 22, 2020
Join Zoom Meeting