ஆனையிறவில் நடந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஆனையிறவுப் பகுதியில் இன்று மாலை (மே 28 ) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆனையிறவுப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வடமாராட்சி கிழக்கு ஆலியவளைப் பகுதியை சேர்ந்த 38 வயதான கந்தசாமி கலைரூபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனம் மோதியவுடன் சாரதி தப்பி சென்ற நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article