ஆணழகன் போட்டியில் 3 ஆம்,4 ஆம் இடங்களை பெற்ற மன்னார் இளைஞர்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இலங்கையின் 74 வது  ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 3 ஆம்,4 ஆம் இடங்களை பெற்ற மன்னார் மாவட்ட இளைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம்(ஏப்ரல் 7) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது 3 ஆம் இடத்தை பெற்ற ஜெஸ்லின் மற்றும் 4 ஆம் இடத்தைப் பெற்ற ஜான்சன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலினால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் மற்றும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் மற்றும் மாவட்ட செயலக பணியாளர்களும் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.
Share this Article