ஆசிரியை குத்திப் படுகொலை – காதலனின் வெறிச் செயல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பாடசாலை ஆசிரியை ஒருவர் பட்டப்பகலில் வீதியில் வைத்துக் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் மாத்தறை, ஊருபொக்க – தொலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆசிரியை நேற்று பிற்பகல் பாடசாலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்த போதே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த ஆசிரியை 26 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது காதலன் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார் குறித்த காதலனைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Share this Article