ஆசிரியர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அரச சேவையில் நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கும் போட்டிப் பரீட்சைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்தப் போட்டிப் பரீட்சை நாளைமறுதினம் (மார்ச் 25) நடைபெறவிருந்த நிலையிலேயே இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகள் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை நிறைவு செய்யப்படும்வரை போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

போட்டிப் பரீட்சைக்கான வர்த்தமானி அறிவித்தல் சட்ட விரோதமானது எனவும், அதற்காக அமைச்சரவை உரிய முறையில் தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share this Article