அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் விமானத்தில் மரணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக விமானத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மெல்பேர்னிலிருந்து நேற்று இரவு 10.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-605 என்ற விமானத்திலேயே மரணம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ரத்னலிங்கம் ராமலிங்கம் என்ற நபரே இவ்வாறு விமானத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share this Article