அல்லைப்பிட்டி விபத்தில் உயிரிழந்த இரு பெண்களும் அடையாளம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
அல்லைப்பிட்டியில் நேற்று மாலை(மே 1) வான், மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான இரு இளம் பெண்களும் அடையாளம் காணப்பட்டனர்.
 26 வயதுடைய ந.நிலக்சனா, 31 வயதுடைய கீ.திவ்யா ஆகியோரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வானில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 24 ஆம் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரே மோட்டார் சைக்கிளில் பயணித்தனர் எனவும் அவர்களில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மற்றையவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மானிப்பாயைச் சேர்ந்த நால்வர் காரில் யாழ்நகர் நோக்கிப் பயணித்த போது வேக்கட்டுப்பாட்டை இழந்தே மோட்டார் சைக்கிளுடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share this Article