அல்லைப்பிட்டியில் மர நடுகை திட்ட நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அல்லைப்பிட்டி அலுமினிய தொழிற்சாலை வீதியில் இன்று(மார்ச் 31) காலை மர நடுகை திட்ட விழா இடம்பெற்றது.

அல்லை விலாஸ் ஹெரிரேஜ் நோர்த் பிறைவேற் லிமிட்ரட், யாழ் மாவட்ட வனவள திணைக்களத்துடன் இணைந்து இந்த மரநடுகை திட்டத்தை நடாத்தியது.

இந்த மர நடுகை திட்டத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) மற்றும் வேலணை பிரதேச செயலர், பிரதேச சபை செயலாளர், பொலிஸ் உயர் அதிகாரிகள், வனவள திணைக்கள அதிகாரிகள்,வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் பிராந்தியப்பணிப்பாளர், அல்லை விலாஸ் ஹெரிரேஜ் நோர்த் பிறைவேற் லிமிட்டெட் அலுவலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

Share this Article