அருட்பணி வசந்தன் அடிகளாருக்கு தூய தோமையார் ஆலயத்தில் பிரியாவிடை நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையில் கடந்த இரண்டு வருடங்கள் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்பணி வசந்தன் அடிகளாருக்கான பிரியாவிடை நிகழ்வு தூய தோமையார் ஆலயத்தில் திருவிழா திருப்பலி நிறைவில் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்றது.

உதவி பங்குத்தந்தை அருட்பணி சோபன் றூபஸ் அடிகளாரின் தலைமையிலும் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் பங்கில் கடந்த ஒரு மாதம் தியாக்கோனாக பணியாற்றி விடைபெறும் இயேசுசபை அருட்பணியாளர் சச்சிந்த பெர்னாண்டோ மற்றும் புதிதாக பங்குத்தந்தையாக நியமிப்பு செய்யப்பட்ட அருட்பணி ஜோண் கொண்சியஸ் அடிகளாரும் கெளரவிக்கப்பட்டனர்.

நெடுந்தீவு பாடசாலை மாணவர்களது கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

Share this Article