அராலியில் நடந்த விபத்தில் 25 வயது இளைஞர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலிச் சந்தியில் இன்று (மார்ச் 18) நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆனைக்கோட்டை, 3ஆம் கட்டையைச் சேர்ந்த ஜெனட் மாறன் என்ற 25 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.

ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பட்டா ரக வாகனம் நயினாதீவில் இருந்து வந்த பஸ்ஸூடன் மோதி விதப்துக்குள்ளாகியுள்ளது.

பட்டா ரக வாகனத்தைச் செலுத்தி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பஸ்ஸின் சாரதி, நடத்துநர் ஆகியோர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this Article