அனுமதிப்பத்திரமின்றி எடுத்துச்சென்ற இரண்டாயிரம் கடலட்டைகள் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரமின்றி கடலட்டைகளை கொண்டுசென்ற இருவர் நேற்று வியாழக்கிழமை (ஓகஸ்ட் 3) காலை மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடலட்டைகள் உயிருடன் மீட்கப் பட்டன.

இராணுவத்தினரால் குறித்த வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது குறித்த கடலட்டைகள் அனுமதிப்பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பல்லவராயன்கட்டு பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கடலட்டைகளுடன் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article