அடுத்த மாதம் குறைக்கப்படவுள்ள எரிபொருள் விலைகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் அடுத்த மாதம் எரிபொருள் விலை கணிசமான அளவு குறைக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, டிசெம்பர் மாதம் மின் கட்டணத்துக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மசகு எண்ணெய் விலை குறைந்து, ரூபாவின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது. எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி ஏற்கனவே எனக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என அமைச்சர் தெரிவித்தார்.

Share this Article